சீனா ரஷ்யா இடையே கூட்டு கடற்படை பயிற்சி நடைபெறுகின்றது!

சீனாவும் ரஷ்யாவும் கூட்டாக நடத்திய கடற்பயிற்சியை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

ஜப்பானிய வான்வெளியில் கடற்படை ஹெலிகொப்டர்கள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க விமானங்கள் அனுப்பப்பட்டதாக ஜப்பானியத் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

பசிபிக் வட்டாரத்தில் சீனாவுடன் முதன்முறை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதை ரஷ்யா உறுதிப்படுத்தியது.

ஜப்பானுக்குத் தெற்கேயுள்ள ஒசுமி நீரிணையைப் பத்துக் கப்பல்கள் கடந்து சென்றன. வடக்கேயுள்ள சுகாரு நீரிணையிலும் அந்தக் கப்பல்கள் காணப்பட்டன. அந்த இரண்டு நீரிணைகளிலும் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்குத் தடையில்லை. ஆனால் சீன, ரஷ்யப் போர்க்கப்பல்கள் அங்கு சுற்றுக்காவலில் ஈடுபட்டது ஜப்பானுக்கு அக்கறைக்குரிய ஒன்றாக உள்ளது.

பீஜிங், மொஸ்கோ ஆகியவற்றுடன் அந்நாட்டுக்குச் சுமுகமான உறவு இல்லை.