திடீரென விஜய் டீவியில் நிறுத்தப்பட்ட சூப்பர்ஹிட் ஷோ

விஜய் தொலைக்காட்சி என்றாலே பெரிதும் நிகழ்ச்சியை தான் ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள். ஆனால், சமீபகாலாமாக நிகழ்ச்சிகளுக்கு இணையான ரசிகர்களை சீரியல்களும் பெற்று வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கூறலாம்.

கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு விஜய்யில் நிறைய ஷோக்கள் ஒளிபரப்பாகின. அதில் ஒன்று தான் காமெடி ராஜா கலக்கல் ராணி. சீரியல் பிரபலங்கள் மற்றும் சில நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமான சிலரும் இந்நிகழ்ச்சியில் ஜோடி போட்டு கலக்கி வந்தார்கள். ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த இந்நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டதாம்.

அண்மையில் காமெடி ராஜா கலக்கல் ராணி பைனல் நிகழ்ச்சியின் ஷூட்டிங் எடுத்துமுடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் யார் என்று இதுவரை தகவல் வெளிவரவில்லை. ஆனால், ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. சிலருக்கு இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்துள்ளது வருத்தமாக இருந்தாலும், சிலர் இதனை கலாய்த்து வருகின்றனர்.