ஷாருக்கானுக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி… மீண்டும் சிறையில் ஆர்யன் கான்!

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக்கானின் மகனுக்கு நேற்றும் ஜாமீன் கிடைக்காத காரணத்தினால் ஷாருக்கான் குடும்பத்தினர் கடும் சோகத்தில் காணப்படுகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான், போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது தன்னுடைய மகனை ஜாமீனில் வெளியே கொண்டு வர, ஷாருக்கானின் குடும்பத்தினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே மும்பையின் புகழ்பெற்ற வழக்கறிஞர் சதீஷ் மன்ஷிண்டே ஆர்யனின் வழக்கை நடத்தி வந்த நிலையில், திடீர் என புதிய வழக்கறிஞர் ஒருவரையும் நியமித்தார் ஷாருகான்.

ஆர்யன் கானின் ஜாமீன் மனு அக்டோபர் 8 ஆம் தேதியிலிருந்து 11ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது பின்பு 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இறுதியாக 20 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மகனுக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஷாருக்கான் காணப்பட்டார்.

நேற்று குறித்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சன்ட் உட்பட 3 பேருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்ததோடு, ஜாமீன் மனுவையும் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.

நான்காவது தடவையாக முயற்சித்தும் மகனை வெளியே கொண்டு வரமுடியாததால் ஷாருக்கான் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.