வலிமை பட அப்டேட்

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

 

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள ஹூமா குரேஷி, யோகிபாபு, புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம் பெறும் ‘நாங்க வேற மாரி…’ என்ற பாடலை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில், அடுத்த பாடலை அக்டோபர் 21ம் தேதி வெளியிட இருக்கிறார்கள். இதை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர்கள் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.