கிராமிய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஏற்கனவே ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு கிராமி விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் இசைக்கென வழங்கப்படும் விருதுகளில் மிகவும் முக்கியமானது கிராமி விருதுகள். இந்த ஆண்டுக்கான 64-வது கிராமி விருதுக்கு, தற்போது பாடல்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் கீர்த்தி சனோன் நடிப்பில் இந்தியில் வெளியான ‘மிமி’ படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை டுவிட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

ஏற்கனவே கடந்த 2009-ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரகுமான், அதே ஆண்டில் அந்த படத்திற்காக 2 கிராமி விருதுகளையும் வென்றார். தப்போது மீண்டும் அவர் இசையமைத்த பாடல்கள் கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் அவருக்கு மீண்டும் கிராமி விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.