இறுதிப்போட்டிக்காக டோனியின் சூப்பர் வியூகம்! அணிக்குள் வரும் சுரேஷ் ரெய்னா…

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறும் நிலையில் சென்னை அணிக்காக விளையாடும் 11 வீரர்கள் குறித்து தெரியவந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடைபெறும் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் வரலாற்றில் இந்த இரண்டு அணிகளுமே கோப்பையை வென்றவை ஆகும். சென்னை அணி இதுவரை 3 முறையும், கொல்கத்தா அணி 2 முறையும் கோப்பையை வென்றுள்ளன.

இந்நிலையில் ப்ளேயிங் 11-க்காக டோனி போட்டு வைத்துள்ள திட்டம் தெரியவந்துள்ளது எவ்வளவு சிறப்பான தொடக்கத்தை ஒரு அணி கொடுத்தாலும், மிடில் ஓவர்களில் கொல்கத்தா சிம்ம சொப்பனமாக விளங்குகிறது.

சென்னை அணியே ஒருமுறை கொல்கத்தாவிடம் அடிவாங்கியுள்ளது. எனவே மிடில் ஆர்டரை பலப்படுத்தும் நோக்கில் சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்குள் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொயீன் அலி சொதப்புவதால், அவருக்கு பதிலாக ரெய்னா கொண்டு வரப்படலாம். மற்றபடி வேறு எந்த மாற்றமும் இல்லை.

சிஎஸ்கே ப்ளேயிங் 11:

டோனி, ருதுராஜ் கெயிக்வாட், டூப்ளசிஸ், ரெய்னா, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாக்கூர், ஹாசல்வுட், தீபக் சாஹர்