பிரபாஸுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை.!

நடிகர் பிரபாஸ் தற்போது ராதேஷ்யாம் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்ற நிலையில் அடுத்ததாக ஆதிபுருஸ், சலார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மகாநடி திரைப்படத்தை இயக்கிய நாக் அஸ்வின் திரைப்படத்தில் அடுத்ததாக நடிக்கப்போகிறார்.

இதற்கடுத்து அவர் புதிதாக நடிக்க உள்ள திரைப்படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் பிரபாஸ் திரைப்படங்களுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றது. ஆதி புருஷ் திரைப்படத்திற்காக 150 கோடி ரூபாயை பிரபாஸ் சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமை பிரபாஸுக்கு தான் சேரும். இந்தியில் வசூல் நாயகர்களாக இருக்கும் அக்ஷய் குமார் மற்றும் சல்மான் கான் ஆகியோர் கூட இதுவரை இவ்வளவு சம்பளம் வாங்கியது இல்லை. நடிகர் ரஜினி தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகர் பிரபாஸ் தனது 25-வது திரைப்படம் பற்றிய அறிவிப்பை இந்த படத்திற்கு ஸ்பிரிட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் கரீன கபூர் கதாநாயகியாக நடிக்க போவதாக கூறப்படுகிறது. சந்திப் ரெட்டி இயக்க இருக்கும் இந்த திரைப்படம் தெலுங்கு தமிழ் இந்தி மலையாளம் கன்னடம் ஆகிய எட்டு மொழிகளில் தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது