வடமாகாணத்தில் இதுவரையில் 783 பேர் மரணம்.. வெளியான தகவல்!

வடக்கு மாகாணத்தில் இதுவரையில் 783 பேர் கொரோனா தொற்றால் மரணமடைத்திருப்பதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் ஒக்டோபர் மாதத்தில் கொரோனா தொற்று பரவலில் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வடமாகானத்தில் இதுவரையில் 37,525 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓகஸ்ட்டில் மாதத்தில் மட்டும் 14,633பேரும், செப்டம்பர் மாதத்தில் 9,414 பேரும், ஒக்டோபர் மாதத்தில் 942 பேர் பாதிக்கப்படுள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றால் வடக்கில் 783 பேர் இதுவரையில் மரணமடைந்துள்ளனர். ஓகஸ்டில் 228 பேரும், செப்டெம்பரில் 348 பேரும், ஓக்டோபரில் 26 பேரும் மரணமடைந்துள்ளனர்.