யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் இயங்கிவந்த போதை மாத்திரை விற்பனை நிலையம்! பொலிஸார் அதிரடி

யாழில் உள்ள வீடு ஒன்றில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டுவந்த நபர ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து சுமார் 6லட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியுடைய போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் 38 வயதான யாழ்.ஏழாலையைச் சேர்ந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையை யாழ்.மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான குற்ற தடுப்பு பிரிவினர் முன்னெத்துள்ளனர். கைது செய்யப்பட்ட் நபரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தியுள்ளனர்.