கொரோனா அபாய நிலையில் இன்னும் குறையவில்லை… இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

நாட்டில் கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தாலும் அது தொடர்பில் அபாய நிலை இன்னும் குறையவில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் கொரோனா சுகாதார வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவது மிகவும் முக்கியம் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரையில் 2 கோடியே 70 இலட்சத்து 58,302 டோஸ் கொரோன தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இதில் 1கோடியே 46 இலட்சத்து 98 ஆயிரத்து 140 பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் போட்டுகொண்டுள்ளனர்.

1 கோடியே 23 இலட்சத்து 60 ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை நேற்று ஒரு நாள் மட்டும் நாட்டில் 1 இலட்சத்து 17 ஆயிரத்து 587 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.