யாழில் இடம் பெற்ற அதிர்ச்சிச் சம்பவம்!

யாழ்.பருத்தித்துறை – புனிதநகர் பகுதியில் சுமார் 50 வரையான வாள்வெட்டு குழு ரவுடிகள் நள்ளிரவு வெளையில் பொது மக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது, இந்த சம்பவத்தில் 5ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமை மோசமானதை அடுத்து பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸாருடன் படையினரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப் பட்டுள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் இடம் பெற்ற பகுதியை சேர்ந்த ஒருவரே வன்முறைக்கு காரணம் எனவும், அவரே யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் 50ற்கும் மேற்பட்ட ரவுடிகளை வாள்களுடன் இறக்கி பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்தியதாக அப்பகுதி மக்கள் சந்தேம் வெளியிட்டுள்ளனர்.

மக்களின் தகவலின் அடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த பகுதியில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபடுபவர்களை பொது மக்கள் கண்டித்ததன் வெளிப்பாடே தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகின்றது.