ஹர்திக் பாண்டியா குறித்த உண்மையை வெளிப்படுத்திய மும்பை கேப்டன் ரோகித் சர்மா!

இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ள ஹர்திக் பாண்டியா எப்போது மீண்டும் பந்து வீசுவார் என்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்று ஐதாரபாத் அணிக்கு எதிராக வெற்றிப்பெற்றாலும் பிளே ஆப் சுற்று வாய்ப்பை மும்பை அணி இழந்தது.

இந்நிலைியல், போட்டிக்கு பின் பேசிய மும்பை கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா மீண்டும் பந்து வீசுவார் அடுத்த வாரம் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் ஆகலாம் என தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியாக விரைவில் பந்து வீச போவதில்லை. காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா 2021 ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக பந்து வீசவில்லை.

பாண்டியா தொடர்ந்து மருத்துவ குழுவின் கண்காணிப்பில் உள்ளார். பிசியோக்கள், பயிற்சியாளர்கள், மருத்துவ குழு அவரை பந்துவீச வைக்க தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

தற்போது வரை எனக்கு தெரிந்த வரைக்கும் அவர் ஒரு முறைக்கூட பந்து வீசவில்லை.

அதுமட்டுமின்றி ஹர்திக் அவரின் பேட்டிங் மீதும் சிறிது அதிருப்தியடைந்துள்ளார் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.