நடிகை பிரியா பவானி சங்கர் பதிவிட்டுள்ள புகைப்படம்.. கமெண்ட் செய்து உருட்டும் ரசிகர்கள்.!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி, இன்று தவிர்க்க முடியாத பிரபல நடிகையாக மாறிஉள்ளவர் பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் வாயிலாக தமிழக மக்களிடையே பிரபலமான நடிகையும் இவர் தான்.

திரைத்துறையில் மேயாத மான் திரைப்படம் வாயிலாக அறிமுகமான பவானி சங்கர், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதனைத்தவிர்த்து, இவர் நடித்து வெளியாகவுள்ள 4 திரைப்படங்கள் காத்திருப்பில் உள்ளன.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் சுறுசுறுப்புடன் இருந்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர், அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களிடையே வரவேற்பை பெறுவார். அந்த வகையில், தற்போது அவர் பதிவு செய்துள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில், “நீங்காத புன்னகை ஒன்று!” என்று ஒரேயொரு பதிவு செய்ய, ரசிகரோ “நீங்காத புன்னகை ஒன்று, வழிந்தோடும் அழகினை கண்டு, கழிந்தோடும் நிமிடங்கள் நின்று, பகைக்கொள்ளும் “பெளர்ணமி” என்று – வளரும் வளர்பிறை சொன்னது, அஃதே இவள் தான் என்றது” என்று கருத்து பதிவிட்டுள்ளார்.