சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 78 வயது கிழட்டு காமுகனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை …!!

8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 78 வயது காம கொடூரனுக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

கரூர் அருகே உள்ள கிராமத்தில் 8 வயது சிறுமி கடந்த ஆண்டு வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமியின் பக்கத்து வீட்டில் உள்ள 78 வயது காமகொடூரன் அந்த சிறுமிக்கு திண்பண்டம் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளான்.

அப்போது அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார்அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து அவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனை அடுத்து முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 ஆயிரம் அபராதமும் விதித்து கரூர் மகளிர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.