யாழ்ப்பாணத்தில் ஒரு மணித்தியாலத்தில் அடுத்தடுத்து 3 கொள்ளை சம்பவம்!

யாழில் ஒரு மணித்தியாலத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் வழிப்பறி கும்பல் காரில் வந்த கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் யாழ்.வடமராட்சி, வல்வெட்டித்துறை மற்றும் வல்லைவெளி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

யாழிற்கு வெள்ளைநிற காரில் வந்த கொள்ளை கும்பல் வீதியில் வந்தவர்களை வழிமறித்து கொரோனா தடுப்பூசி அட்டையினை காட்டுமாறு கேட்டுள்ளனர். பின்னர் அவர் தடுமாற அவரிடமிருந்த பண பையை பறித்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து யாழ்.வல்வெட்டித்துறையில் உழவு இயந்திரத்தில் கல் ஏற்றிவந்த நபரை வழிமறித்து அனுமதி பத்திரம் கேட்டு குறித்த நபரை அச்சுறுத்தி பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் யாழ்.வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த வல்வெட்டித்துறை பொலிஸ் அதிகாரிகளிடம் குறித்த வெள்ளைநிற காரில் அங்கவீனமுற்றவர்கள் பயன்படுத்தும் கைத்தடி ஒன்று காணப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.