முன்னாள் மனைவியுடன் அபிஷேக் வைரலாகும் புகைப்படம்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 இல் கலந்துகொண்டுள்ள அபிஷேக் ராஜாவின் முன்னாள் மனைவியின் இன்ஸ்டாகிராம் பக்க பதிவு தற்பொழுது வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் யூடியூப் பிரபலம் அபிஷேக் ராஜா போட்டியாளராக உள்ளார். அபிஷேக் ராஜா பிரபலங்களை தனக்கே உரிய பாணியில் நேர்காணல் நடத்தி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார்.

இந்த நிலையில் அபிஷேக் ராஜாவின் முன்னாள் மனைவி தீபா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், நமக்கு ஒரு துக்கமான நிகழ்வு நடந்தால் அதில் இருந்து நம்மை நாமே வெளியே கொண்டு வருவது எவ்வளவு கடினம் என்று அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அப்படி இருந்தும் ஒரு சிலர் நம்மை வேண்டும் என்றே நம்முடைய கடந்த காலத்தில் ஒரு பகுதியைத் தூண்டி விடுவதால் நம்முடைய ஒரு நாள் அல்லது ஒரு வாரம் சோகமயமாகி விடுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 3 வருடங்களுக்கு முன் திருமண வாழ்க்கையில் இருந்து நான் விலக முடிவு செய்த போது, எல்லா செயல்களையும் நானே செய்துகொள்ள முடிவு செய்திருந்தேன். இது தனிப்பட்ட முடிவு என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

திபாவின் மற்றொரு பதிவில், திருமணமான புதிதில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தேன். அந்த பேட்டி விவாகரத்து ஆன பிறகு தான் அதிகமாக வைரல் ஆகி வருகிறது.

எனவே அந்த பேட்டியை நீக்கி விடுங்கள் என கேட்டிருந்தபோதும், சம்மந்தப்பட்ட நிறுவனம் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் என் முன்னாள் கணவர் மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளதால் அவர் குறித்து தேடும்போதும் இந்த பேட்டி தான் வருகிறது.

இந்நிலையில் அந்த பேட்டி பற்றி என்னிடம் பலரும் பேசும்போது மிகவும் மன உளைச்சல் ஏற்படுகிறதாக அபிக்ஷேக்கின் முன்னாள் மனைவி பதிவிட்டுள்ளார்.