கழிப்பறைக்கு செல்வதற்கு கூட ரிசாத்திற்கு அனுமதி மறுப்பு

சிறையிலடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனிற்கு மாலை ஐந்து மணிக்கு பின்னர் கழிப்பறையை பயன்படுத்துவதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளது.

ஐந்து மணிக்கு பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கழிவறைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளதனால் அவர் போத்தலில் சிறுநீர் கழிக்கின்றார் என லக்ஸ்மன் கிரியல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே இது தொடர்பில் சபாநாயகர் தலையிட்டு நாடாளுமன்ற உறுப்பினரின் உரிமையை பாதுகாக்க வேண்டும் எனவும் லக்ஸ்மன் கிரியல்ல வேண்டுகோள் விடுத்துள்ளார்.