யாரும் காணாத அஜித்தின் வலிமை பட புகைப்படங்கள்

அஜித் தமிழ் சினிமாவில் ஒரு தனி வழியில் பயணிப்பவர். படப்பிடிப்பு முடித்து ஓய்வு எடுக்காமல் தனது கனவுகளை நனவாக்கும் எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பவர்.

கடந்த சில வருடங்களாக வலிமை பட படப்பிடிப்பில் இருந்த அவர் இப்போது பைக்கில் சில நாடுகளுக்கு பயணம் செல்ல ஆர்வம் காட்டி வருகிறார். அதற்காக பிரபலங்கள் பலரையும் நேரில் சந்தித்து வருகிறார்.

வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. இந்த நேரத்தில் தான் வலிமை படத்தின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

படத்தை பற்றிய அப்டேட்டிற்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் புகைப்படம் வந்ததும் அதை பெரிய அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.