தனது குடும்பத்தினை சிதைத்த இளைஞரின் வெறிச்செயல்

டிரினிடாட் மற்றும் டொபாகோவில் கனேடிய இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தினர் மூவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வெள்ளிக்கிழமை பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடா மற்றும் டிரினிடாட் நாட்டின் இரட்டைக்குடியுரிமை கொண்ட ராகேஷ் டேவிட்(25) என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 24ம் திகதி சான் ஜுவான் முகவரியில் 77 வயதான குமாரி கவுலேசர்-திமல், 48 வயதான ராதேஷ்கா திமல் மற்றும் 22 வயதான சக்கரி டேவிட் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதில் ராதேஷ்கா திமல் மற்றும் சக்கரி டேவிட் ஆகிய இருவரும் கனேடிய குடிமக்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தாயார், சகோதரர் மற்றும் பாட்டியை கொலை செய்த வழக்கில் ராகேஷ் டேவிட் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது கொலை வழக்கு மற்றும் ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் வழக்கு பதியப்பட்டுள்ளது.