கரடிக்கு உணவளித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு, 60,000 டொலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Zuzana Stevikova என்ற பெண்ணுக்கே அபராதம் விதித்து North Vancouver Provincial Court உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு Zuzana Stevikova என்ற பெண், வாரம் ஒருமுறை 50 பவுண்ட்ஸ் கேரட்டுகள், 15 டஜன் முட்டைகள் மற்றும் அதிகளவு ஆப்பிள்களை வாங்கியுள்ளார்.

சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் Zuzana Stevikova-ன் வீட்டை பார்த்த போது கரடிகளுக்கு உணவளிப்பது தெரியவந்தது.

மேலும் மூன்று கரடிகள் அடிக்கடி அந்த ஏரியாவில் உலாவி வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசாருக்கு அளித்த புகாரின் பேரில், Zuzana Stevikovaமீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், 60,000 டொலர் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.