இத்தாலி நகரசபை தேர்தலில் களமிறங்கப்போகும் இலங்கைப் பெண்

இத்தாலி- மிலான் நகரசபை தேர்தலில் இலங்கை பெண்ணொருவர் போட்டியிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி இலங்கை பெண்ணான தம்மிகா சந்திரசேகர என்பவரே இவ்வாறு , இலக்கம் 8இல் போட்டியிடுவதாக கூறப்படுகின்றது.

குறித்த பெண், சுமார் 30 வருடங்களாக இத்தாலியில் வசித்து வருவதுடன், அங்கு பல சமூக பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் அவருக்கு , அதிக வாக்குகள் கிடைக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் மிலான் பகுதியில் உள்ள பெரும்பாலான இலங்கையர்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக தம்மிகா சந்திரசேகர, நம்பிக்கை வெளியிட்டுள்ளார்