கனேடியர்களுக்கு ப்ளூ காய்ச்சல் தொடர்பாக விரைந்து தடுப்பூசி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

கனேடியர்கள் உடனடியாக ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனாவுக்கான தடுப்பூசி பெற்றுக்கொண்டிருந்தாலும் சரி, ப்ளூவுக்கான தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அவர்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளார்கள்.

அதற்கு காரணம் என்னவென்றால், கடந்த ஆண்டில் ப்ளூ காய்ச்சல் மிகவும் குறைவான அளவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. அப்படி ஒரு ஆண்டில் ப்ளூ மிக குறைவாக இருக்குமானால், அதற்கு அடுத்த ஆண்டில் பயங்கரமாக அது தாக்குமாம்.

ஆகவேதான், எப்படியாவது ப்ளூ தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு கனேடியர்களை மருத்துவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.