தங்கம் விலையில் அதிரடி மாற்றம்!

இந்த செப்டம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் விலையேற்றம் இருந்தாலும், சரிவு விலை அடிக்கடி தொடர்கிறது.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ரூ.4,364-க்கு விற்பனையாகிறது. இது பவுனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.34,912-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று 4,726 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,728 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று 37,808 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 16 ரூபாய் உயர்ந்து 37,824 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,524 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,320 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,320 ஆகவும், கேரளாவில் ரூ.4,324 ஆகவும், டெல்லியில் ரூ.4,535 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,590 ஆகவும், ஒசூரில் ரூ.4,363 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,359 ஆகவும் இருக்கிறது.

ஆனால், வெள்ளியின் விலையில் கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.64.10-க்கும், கிலோவுக்கு ரூ.800 குறைந்து ரூ.64,100-க்கும் விற்கப்படுகிறது.