டாக்டர் பட்டம் பற்ற டி.இமான்.. !!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இசையமைப்பாளர் டி.இமான்.

இதன்பின் பல படங்களுக்கு இசையமைத்து வந்த இவர், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களின் மூலம் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரானார்.

தற்போது தமிழ் திரையுலகிலுள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் இமான்.

சமீபத்தில் கூட விஸ்வாசம் படத்தில் இவர் போட்டிருந்த கண்ணானா கண்ணே பாடலுக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது டி. இமானுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விழாவில் எடுக்கப்பட்ட வீடியோவை டி இமான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.