வீடியோவில் அம்பலமான ஐபோன் 13 ப்ரோ பேட்டரி விவரங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 ப்ரோ மாடலில் குவால்காம் எக்ஸ்60 5ஜி மோடெம் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் சில வாரங்களுக்கு முன் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய ஐபோன்களின் விற்பனை பல்வேறு நாடுகளில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐபோன் 13 ப்ரோ டியர்டவுன் வீடியோ வெளியாகி இருக்கிறது.

அதில் ஐபோன் 13 ப்ரோ மாடலில் 3095 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 12 ப்ரோவில் வழங்கப்பட்ட 2815 எம்.ஏ.ஹெச். பேட்டரியை விட அதிகம் ஆகும். அதிக திறன் இருப்பதால் ஐபோன் 13 ப்ரோ முந்தைய மாடலை விட 1.5 மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்குகிறது.

ஐபோன் 13 ப்ரோ மாடலில் உள்ள பேட்டரி எல் வடிவம் கொண்டிருக்கிறது. மேலும் இதனை சன்வுடா எலெக்ட்ரிக் கோ எனும் நிறுவனம் உற்பத்தி செய்து இருக்கிறது. இத்துடன் புதிய ஐபோனில் சாம்சங் வழங்கிய 120 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன் உள்ளது. இத்துடன் குவால்காம் எக்ஸ்60 5ஜி மோடெம் வழங்கப்பட்டு இருக்கிறது.