கொரோனாவால் சைவ குருக்கல் ஒருவர் மரணம்.. வெளியான தகவல் !

முல்லைத்தீவு முள்ளியவளை – கணுக்கேணி மேற்கு கற்பக விநாயகர் ஆலய குருக்கல் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் 23ம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் 24ம் திகதி நேற்றய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.