வலிமை படம் முழுமையாக வெளிவராத நிலையிலும் நிகழ்த்திய சாதனை

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம், அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சமீபத்தில் வலிமை திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று காலையில் இருந்தே வலிமை திரைப்படத்தின் Glimpse-காக எதிர்பார்த்து காத்திராத ரசிகர்களுக்கு மாலை 6.30 மணியளவில் Glimpse வெளியிடப்பட்டது.

வெறித்தனமான காட்சிகளுடன் வெளியான அந்த Glimpse இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் தற்போது வலிமை Glimpse யூடியூப்பில் 40 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது.