போலி சுகாதார பாஸ் தயாரித்து மாட்டிக்கொண்ட பெண்மணி

பெண் ஒருவர் தனது குடும்பத்திற்காக போலி சுகாதார பாஸ் ஆவணங்களை தயாரித்து கொடுத்துள்ளார். Bordeaux நகரில் உள்ள மிகப்பெரிய தடுப்பூசி மையத்தில் பணிபுரியும் இளம் பெண் ஒருவரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

19 வயதுடைய குறித்த இளம் பெண், தனது பணியினை தவறுதலாக பயன்படுத்தி கிட்டத்தட்ட 20 போலியான ஆவணங்களை தயார் செய்துள்ளார். இவ்வாரத்தின் திங்கட்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று புதன்கிழமை அவரது மோசடி உறுதி செய்யப்பட்டு, 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு €3.000 யூரோக்கள் தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன், பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.