சமந்தாவுடன் விவாகரத்து செய்தி குறித்து முதன்முறையாக பேசினார் அவரது கணவர்

பல்லாவரத்து பொண்ணு என தமிழ் மக்களால் கொண்டாடப்படுபவர் நடிகை சமந்தா. தமிழை பெரிய ஹிட் படங்களை கொடுத்த அவருக்கு தெலுங்கிலும் படங்கள் நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்தது.

அதன்பிறகு தன்னுடன் படங்களில் நடித்த தெலுங்கு சினிமா நடிகர் நாக சைத்தன்யாவை காதல் திருமணம் செய்து ஹைதராபாத்திலேயே செட்டிர் ஆனார்.

கடந்த சில நாட்களாக சமந்தா-நாக சைத்தன்யா இருவரும் விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என்ற செய்தி உலா வருகிறது. இதுகுறித்து முதன்முறையாக ஒரு பேட்டியில் நாக சைத்தன்யா பேசியுள்ளார்.

அதில் அவர், விவாகரத்து செய்தி எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உடனே வந்து விடுகிறது.

இன்று ஒரு செய்தி பரபரப்பாக இருந்தால், நாளை இன்னொரு செய்தி பரபரப்பாக இருக்கிறது, முந்தையநாள் செய்திகள் மறந்து விடுகின்றன. இந்த புரிதல் எனக்குள் வந்தவுடன் நானும் இதுகுறித்து கவலைப்படுவதே நிறுத்தி விட்டேன் என கூறியுள்ளார்.