கொரோனாவில் இருந்து உலகம் விடுபடுவது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரித்து உலகம் முழுவதும் தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்தால் ஒரு வருடத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் முடிக்கு வந்து , உலகம் இயல்புக்குத் முடியும் என மொடர்னா மருத்தாக்கல் நிர்வாகத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஸ்டீபன் பான்செல் (Stephen Boncel) தெரிவித்துள்ளார்.

சுவிஸ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஸ்டீபன் பான்செல் (Stephen Boncel) இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தடுப்பூசி உற்பத்திகளை அதிகரித்தால் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் போதிய அளவு தடுப்பூசிகள் கிடைக்கும்.

இதன்மூலம் உலகில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட முடியும். தேவையான அளவு பூஸ்டர் தடுப்பூசிகளையும் வழங்குவதை சாத்தியமாக்க வேண்டும் எனவும் கூறிய அவர், சிறுவர்களுக்கான தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அவா் குறிப்பிட்டார். தடுப்பூசி போடாதவர்கள் கூட தாமாகவே விரைவில் தடுப்பூசி போடுவார்கள். ஏனென்றால் டெல்டா திரிவு வைரஸ் வேகமாகத் தொற்றக்கூடியது.

எனவே தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால் சாதாரண காய்ச்சல் போன்ற விளைவுகளுடன் நெருக்கடியில் இருந்து வெளியேறலாம். மருத்துவமனை சோ்க்கைகளையும் தவிர்க்க முடியும் எனவும் மொடர்னா நிர்வாகத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஸ்டீபன் பான்செல் (Stephen Boncel) கூறினார்.

இதன்போது அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டடில் உலகம் இயல்பு நிலைக்கு திரும்புமா? என வினவியபோது , ஒரு வருடத்தில் இது சாத்தியமாகலாம் என நான் கருதுகிறேன் என அவர் கூறினாார்.

இதேவேளை, டெல்டா திரிபை எதிர்கொள்ளும் வகையில் சில விரிவான பரிசோதனைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆய்வுகளின் மேம்பாடு 2022 பூஸ்டர் தடுப்பூசிக்கு அடிப்படையாக அமையும் எனவும் மொடர்னா மருத்தாக்கல் நிர்வாகத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஸ்டீபன் பான்செல் (Stephen Boncel) இதன்போது மேலும் தெரிவித்தார்.