இரு பிரபல நடிகைகள் ஒன்றிணைகிறார்கள்

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வேதாளம். இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர்.

இப்படத்தில் அஜித் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கிறார். மேலும் லட்சுமி மேனன் நடித்திருந்த தங்கை கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

வேதாளம் படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்த கதாபாத்திரத்தில், தெலுங்கில் யார் நடிக்க போகிறார் என்ற ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்த கதாபாத்திரத்தில், தெலுங்கில் நடிகை தமன்னா நடிக்கப்போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதன்முலம், இரண்டு முன்னணி நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் தமன்னா இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கவிற்கின்றனர் என்று கூறுகின்றனர்.