செம்ம கொண்டாட்டத்தில் வீடியோ வெளியிட்ட அஞ்சலி.!

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி தொடர்ந்து அஞ்சலி அங்காடி தெரு, ரெட்டைசுழி, எங்கேயும் எப்போதும், தூங்காநகரம், மங்காத்தா, கலகலப்பு ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது, இவர் தமிழில் யோகி பாபு உடன் சேர்ந்து பூச்சாண்டி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

சமீபத்தில் அஞ்சலி ஒரு பேட்டியில், “நான் ஒருவரை காதலித்தேன். ஆனால் ஒரு சில காரணங்களால் அது நிறைவேறவில்லை. தற்போது எனது அம்மாவுடன் இணைந்து நான் ஹைதராபாத்தில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.” என்று அவர் தெரிவித்து காதல் குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில், நடிகை அஞ்சலி தனது செல்லப்பிராணி ஐஸ்க்ரீம் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு இது ஐஸ்க்ரீம் டைம் என்று கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Anjali (@yours_anjali)