கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரின் துரோகத்தினாலே ஆட்சி வீழ்த்தப்பட்டது!

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களில் ஒருவர் துரோகத்துக்கு விலை போனதால் ஆட்சி வீழ்த்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அங்கஜன், சுமந்திரனின் ஆசீர்வாதத்தோடு வல்வெட்டித்துறையில் தமிழ்தேசியம் அடித்து வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் தேர்வு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற வல்வெட்டித்துறை நகரசபைக்கான தலைவர் தேர்தலில் தமிழ்த் தேசியத்தை சீர்குலைக்க கூடிய விடயங்கள் நடைபெற்று சுயேட்சை குழுவின் தலைவரான செல்வேந்திரா அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.