அமெரிக்காவில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக எழுந்த ஆர்பாட்டங்கள்

அமெரிக்காவில் கோட்டாபய ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றியிருந்தார்.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதுடன், ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை கண்டறியுமாறும், அரசியல் எதிரிகளை அடக்குவதை உடனடியாக நிறுத்துமாறும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.