நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வெடிகுண்டு மிரட்டல்

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்கு இடையே 3வது ஒரு நாள் போட்டி தொடர் நடைபெறவிருந்தது. இந்த நிலையில், நியூசிலாந்து அணி நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு வந்த மிரட்டல் செய்தியில், அணியினர் தங்கியிருக்கும் ஹோட்டலில் வெடிகுண்டு ஒன்று வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, நியூசிலாந்து அணி நாடு திரும்பும்போது அவர்களது விமானத்திலும் வெடிகுண்டு வைக்கப்படும் என மிரட்டல் விடப்பட்டுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் தொடர்புடைய மிரட்டல் இ-மெயில் ஒன்றை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை பெற்றுள்ளது. இதனை நியூசிலாந்து கிரிக்கெட் அணியும் உறுதிப்படுத்தி உள்ளது. இதனையடுத்து நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.