ருசியான பலாக்கொட்டை வடை செய்யலாம் வாங்க

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் அனைவருக்கும் பிடித்தது. பலாச்சுளைகளை சாப்பிடும் போது அதிலிருக்கும் கொட்டையை தூக்கி எறியாமல் சுவையான வடை தயாரிக்கலாம்.


தேவையான பொருட்கள்

பலாக்கொட்டை – 25
அரிசி மாவு – 2 கப்
வெங்காயம் – 1 (சிறிதாக நறுக்கியது)
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி
இஞ்சி – 1 அங்குலம் ( பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
ஓமம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முதலில் பலாக்கொட்கைளை நன்றாக கழுவி குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்பு அவற்றை ஆறவைத்து மேலே இருக்கும் தோலை நீக்கி விட வேண்டும். பிறகு பலாக்கொட்கைளை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

இந்த விழுதை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி தழை, மிளகாய்த்தூள், ஓமம், உப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அந்த கலவையில் அரிசி மாவு சேர்த்து கலந்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ள வேண்டும்.

அந்த மாவை சிறிது நேரம் மூடி வைத்து வடை போல தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

25 பலாக்கொட்டைகளில் 35 வடைகள் தயாரிக்கலாம்.

சூப்பரான பலாக்கொட்டை வடை தயார்.