பரபரப்பான திருப்பங்களுடன் சர்வைவர் நிகழ்ச்சியில் தங்களை தக்க வைக்க போராடும் போட்டியாளர்கள்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான சர்வைவர் நிகழ்ச்சியில் இன்றைய ப்ரொமோ வெளியாகியுள்ளது.

இதில் எலிமினேஷனிலிருந்து தப்பிப்பதற்காக போட்டியாளர்கள் பயங்கர சவால் ஒன்றினை எதிர்கொண்டு வருகின்றனர்.

அர்ஜுனின் கம்பீரமாக குரலுடன் தொகுத்து வழங்கப்பட்டு வரும் இந்நிகழ்ச்சிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியினைப் போன்று பார்வையாளர்கள் பெருகி வருகின்றனர்.

காடர்கள், வேடர்கள் என்று இரு அணிகளாக பிரிந்து தனது அன்றாட தேவைகளை சந்திப்பதற்கு பல சவால்களை எதிர்நோக்கும் இவர்களில் யார் இந்த வாரம் எலிமினேஷன் ஆக உள்ளனர் என்ற கேள்வி இருந்த பார்வையாளர்களுக்கு நேற்றைய தினம் ஒரு டுவிஸ்ட் கிடைத்தது.

ஆம் ராம், வி ஜே பார்வதி இவர்களை எல்லாரும் சேர்ந்து எலிமினேஷனுக்கு தெரிவு செய்ய அங்கு ஒரு டுவிஸ்டையை வைத்தார் அர்ஜுன்.

குறித்த வாக்கு செல்லாது என்றும் ட்ரை லீடருக்கு அதிகமான வாக்கு வாங்கியவர்களான இந்திரஜா, சிருஷ்டி இருவரும் தான் எலிமினேஷன் என்று கூறினார். ஆனால் அவர்களும் சோகமாக படகில் சென்று கொண்டிருக்க படகு வெளியே செல்லாமல் இருவரையும் வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று விட்டது.

அங்கு விளையாட்டை விட்டு நீங்கள் இன்னும் வெளியே செல்லவில்லை என்று ஒரு தகவலும் எழுதியிருந்தது. இதனை அவதானித்த சிருஷ்டி மற்றும் இந்திரஜா உச்சக்கட்ட மகிழ்ச்சியில் திகைத்தனர்.