கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கான அறிவுறுத்தல்

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பின்னர் மன அழுத்தத்திற்கு உள்ளாகுபவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மன அழுத்தத்திற்கு உள்ளாகுபவர்கள் 1926 எனும் இலக்கத்தினை தொடர்புக் கொள்ளுமாறு தேசிய மனநல நிறுவனத்தின் நிபுணரான வைத்தியர் சஜீவன அமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீனாவில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 1500 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வறிக்கையில் அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளானமை தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்கள் ஆறு மாதங்களின் முடிவில் மற்றும் ஒரு வருடத்திற்கு ஒரு முறை மதிப்பீடு செய்யப்பட்டதில் 25% ஆனோர் மன அழுத்தம் மற்றும் பிற மனநலக் கவலைகளால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.