5 பேர் கும்பலால் பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. நாடகக்காதல் பெயரில் பயங்கரம்.!

மயக்க மருந்து கொடுத்து பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் ஜவஹர்லால் தெருவை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனக்கு வேலை வாங்கி தர கோரி தொழிலதிபர் குணசீலன் என்பவரிடம் உதவி கோரியிருக்கிறார். குணசீலனும் உதவி செய்வதாக சொல்லி அவருடன் பழகி வந்துள்ளான். சில நாட்கள் கழித்து அந்த இளம்பெண்ணிடம் அவரை காதலிப்பதாக குணசீலன் கூறியுள்ளான்.

கயவனின் எண்ணம் புரியாத இளம்பெண்ணும், குணசீலன் உண்மையான குண சீலனாக இருப்பான் என்று எண்ணி காதல் வலையில் விழுந்துள்ளார். அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதற்கிடையில் தனது பூர்வீக சொத்துக்களை காண்பிக்க வேண்டும் என அந்த பெண்ணிடம் கூறி அவரை குணசீலன் அழைத்து சென்றுள்ளான்.

நாடகக்காதலனின் விபரீத திட்டம் தெரியாமல் பெண்ணும் அவனை நம்பி உடன் சென்றார். அப்போது தான் அவனின் உண்மையான நோக்கம் தெரியவந்துள்ளது. அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து, அவர் மயக்கமடைந்ததும் தனது நண்பர்களை அழைத்து அந்த பெண்ணை பம்பு செட்டுக்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மயக்கம் தெளிந்து அந்த பெண் சத்தம் போட்டதை அடுத்து, பொதுமக்கள் அங்கு வந்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நாடகக்காதல் கும்பல், மாட்டினால் தோலை உரித்து தொங்கவிட்டு சம்பவம் செய்திடுவார்கள் என்று எண்ணி அங்கிருந்து தலைதெறிக்க தப்பியோடி தலைமறைவாகியுள்ளது.

உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அந்த பெண் அளித்த வாக்கு மூலத்தின்படி, வழக்கறிஞர்கள் ஜெபநேசன் , குணசேகரன், தொழிலதிபர் குணசீலன், அவரது நண்பர் அஜித் ஆகியோரை கைது செய்தது காவல்துறை. அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள 5 ஆவது நபருக்கு வலைவீசப்பட்டுள்ளது.

காதல் என பொய் கூறி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் காம கொடூரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே இது போன்ற கொடுமைகளில் இருந்து பெண்களை காப்பாற்ற முடியும். பெண்கள் தங்களிடம் பழகும் ஆண்களின் பின்னணி தெரியாமல் மனதை பறிகொடுத்து, வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பெரும் சோகத்திற்கு உள்ளாக்குவது தொடர்கதையாகியுள்ளது. சிந்தித்து செயல்படுவது சாலச்சிறந்தது என்பதற்கு, இதுவும் ஓர் சாட்சி சம்பவமாக அமைந்துள்ளது.