கனடாவில் பள்ளி மாணவியை சீரழித்த ஆசிரியர்

கனடாவின் Saskatchewan பிராந்தியத்தில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி மாணவியை சீரழித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் 49 வயதான குறித்த ஆசிரியரை ரெஜினா நகர பொலிசார் கைது செய்துள்ளதுடன், அவர் மீது பாலியல் அத்துமீறல், உடல் ரீதியாக ஆதாயம் தேடுதல் உள்ளிட்ட குற்றச்சாடுகளை பதிவு செய்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் இளம் மாணவி ஒருவர் தொடர்பில் விவாதிக்கப்பட்டு வந்ததன் மூலம் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை என பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தொடர்புடைய ஆசிரியருக்கும் அந்த மாணவிக்கும் இடையேயான பொருத்தமற்ற உறவு அல்லது தொடர்பு குறித்து வியாழக்கிழமை தங்களுக்கு தெரிய வந்ததாக ரெஜினா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்பில் அறிக்கை சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கைதான ஆசிரியரின் இந்த பொருத்தமற்ற உறவு தொடர்பில் குறித்த பள்ளி நிர்வாகம் ஏற்கனவே அறிந்திருந்தது எனவும், அதனால் ஆசிரியர் ஜெஃப்ரி டும்பா கைதாகும் போதும் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், மாணவி தொடர்புடைய பள்ளியின் பெயரை விசாரணை நிமித்தம் வெளியிட முடியாது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இது பாதிக்கப்பட்ட மாணவின் அடையாளத்தை பாதுகாக்க உதவும் என்றே விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக எதிர்வரும் அக்டோபர் 21ம் திகதி ஆசிரியர் டும்பா நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.