பிஞ்சு குழந்தைகளை விட்டு வைக்காத காமுகன்!

சென்னையில் கள்ளக்காதலியின் குழந்தை முதல் பக்கத்து வீட்டு சிறுமிகள் வரை என 5 பேருக்கு பாலியல் டார்ச்சர் தந்த நபரை சென்னை போலீசார் கைது செய்தனர்.

அண்ணாநகர் கிழக்கு, ஆர்விநகரை சேர்ந்தவர் பெருமாள்.. 48 வயதாகிறது.. ஜூஸ் கடை வைத்துள்ளார்.. அதேபகுதியை சேர்ந்தவர் ஷீலா.. 30 வயதாகிறது..

இவரது கடைக்கு, ஜுஸ் குடிக்க அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

ஷீலா வீட்டிற்கு அவ்வப்போது சென்று பெருமாள் உல்லாசமாக இருந்துள்ளார்.. இந்நிலையில், ஷீலாவின் 9 வயது மகள் மீது பெருமாளுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது… இதனால், ஷீலா வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற பெருமாள், சிறுமிக்கும் பாலியல் டார்ச்சர் கொடுத்துள்ளார்…

மேலும், அந்த டார்ச்சர்கள் அனைத்தையும் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, அதை வைத்தும் மிரட்டி தொடர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த விஷயம் ஷீலாவுக்கும் தெரியும்.. ஆனால், வீட்டு செலவுக்கு பெருமாள் அடிக்கடி பணம் தந்து வந்ததால், தன்னுடைய மகள் பாதிக்கப்பட்டதையும் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது..

இந்நிலையில், ஷீலாவின் வீட்டிற்கு அவரது தங்கை மாலா என்பவர் வந்துள்ளார்.. மாலாவுக்கு 28 வயதாகிறது.. மாலாவுடனும் பெருமாளுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.. மாலாவின் மகளுக்கு 4 வயதாகிறது.. பெருமாள் இந்த 4 வயது குழந்தையையும் விட்டு வைக்கவில்லை.. இதைவிட அதிர்ச்சி, இந்த விஷயம் மாலாவுக்கும் தெரியும்… ஆனால், எதையும் மாலா கண்டும் காணாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுபோக, ஷீலாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த 11 வயது சிறுமியையும் மிரட்டி பெருமாள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்… ஆனால், இது தெரிந்ததும் அந்த வீட்டு பெற்றோர் கொந்தளித்துள்ளனர்.. நேராக இதை பற்றி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஆலோசனை மையத்திற்கு சென்று புகார் தந்துவிட்டனர்.. அந்த புகாரின்பேரில், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசுக்கு புகாரை அனுப்பினர்..

இதையடுத்து, வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் பெருமாளை சுற்றி வளைத்து பிடித்து விசாரணையை ஆரம்பித்தனர்.. 4 வயது சிறுமி முதல் 17 வயது சிறுமி வரை 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது… மேலும் அவரது செல்போனை பார்த்து போலீசார் மிரண்டு போய்விட்டனர்.. அத்தனையும் ஆபாச வீடியோக்கள் நிறைந்து கிடந்ததாம்.. அதிலும் பிஞ்சுகளின் வீடியோக்கள் அதிகமாக சேகரித்து வைத்திருந்துள்ளார்..

அதை தொடர்ந்து பெருமாளை போலீசார் போக்சோ சட்டத்தில் ஜெயிலில் அடைத்தனர். .. அவருக்கு உடந்தையாக இருந்த ஷீலாவையும், மாலாவையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்… இப்படி தங்கள் குழந்தைகளை பாலியல் கொடுமை செய்வதற்கு 500 முதல் 2,000 ரூபாய் வரை ஷீலா, மாலாவுக்கு பெருமாள் தந்து வந்தாராம்.. அதனால்தான் அவர்கள் அமைதியாகவே இருந்து ஒத்துழைப்பு தந்துள்ளனராம்.. இதையெல்லாம் கேள்விப்பட்டு அந்த பகுதி மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்… “பிஞ்சுகளை நாசம் செய்தவனை ஜாமீனில் கூட விடாதீங்க.. அதுக்கு உடந்தையாக இருந்த 2 தாய்மார்களையும் வெளியே விடாதீங்க” என்று கொந்தளித்து சொல்கிறார்கள் பொதுமக்கள்.