ரப்பர் நிப்பிள்.. குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள்…

குழந்தைகள் அழாமல் இருக்க வாயில் வைக்கப்படும் ரப்பர் நிப்பிள் குழந்தைக்கு பாதுகாப்பானதா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ரப்பர் நிப்பிளை குழந்தைக்கான பொருள் என்றே அனைவரும் பார்க்கின்றனர். ஆனால், அது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அழும் குழந்தை, சோர்வாக மகிழ்ச்சி இல்லாத குழந்தையை இயல்பு நிலைக்குத் திருப்ப பலரும் இந்த ரப்பர் நிப்பிளை (Baby Pacifier) பயன்படுத்துகின்றனர்.

குழந்தைகள் அழாமல் இருக்க வாயில் வைக்கப்படும் ரப்பர் நிப்பிள் குழந்தைக்கு பாதுகாப்பானதா? நிச்சயம் இல்லை. 6 மாதமாக பயன்படுத்தும் ரப்பர் நிப்பிள் குழந்தையை தாய்ப்பால் அருந்தவிடாமல் பாதிக்க செய்யும். கழுத்து போன்ற பகுதிகளில் அடைத்துகொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தும்.

அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. தொடர்ந்து இந்த ரப்பர் நிப்பிளை பயன்படுத்தினால் பற்கள் தொடர்பான பிரச்சனைகளும் வரலாம். குழந்தை பேசுவதில் பிரச்சனை ஏற்படலாம்.

ரப்பர் நிப்பிளை தொடர்ந்து வாயில் வைப்பதால் கிருமிகள் வளர வாய்ப்பைத் தருகிறது. கிருமிகள் வளர அதிகம் உதவுகிறது. சுத்தப்படுத்தாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகையில் வாயில் தொற்றும் ஏற்படுகிறது. பெரும்பாலும் இந்த செயற்கை நிப்பிளைத் தவிர்ப்பதே நல்லது. அவசியம் தேவைப்பட்டால் சிலிக்கான் நிப்பிள் வாங்கலாம். அதையும் முறையாக சுத்தப்படுத்துதல் அவசியம். குழந்தைக்கு அடிக்கடி கொடுக்க கூடாது.

குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என நினைத்தால் இந்த ரப்பர் நிப்பளை குழந்தைக்கு கொடுக்க கூடாது. அதிகமாக இதைப் பயன்படுத்தினால் குழந்தைகள் தாய்ப்பால் குடிக்க மாட்டார்கள். குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதை விரைவில் நிறுத்திக் கொள்வார்கள். தாய்ப்பால் இல்லாமல் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காது.

குழந்தையின் கழுத்தில், கைகளில் ரப்பர் நிப்பிளை கட்டிவிட கூடாது. தவறுதலாக குழந்தைக்கு திடீர் அடைப்பு ஏற்பட்டு விடலாம். இதனால் குழந்தைக்கு ஆபத்தான பாதிப்பு கூட ஏற்பட்டுவிடும். குழந்தைகளுக்கு அதிகமாக ரப்பர் நிப்பிளை பயன்படுத்தினால் அவர்கள் பேசுவதில் தடையை ஏற்படுத்தும்.

சில குழந்தைகளுக்கு, வாய், பற்கள் ஆகியவை பாதிக்கப்படும். பற்களின் வளர்ச்சி நன்றாக இருக்காது. சரியான வளர்ச்சி இல்லாமல் இருந்தால், குழந்தைகள் பேச முடியாமல் போகும்.

லேட்டக்ஸ் எனும் மெட்டிரியல் கொண்டு தயாரிக்கப்படும் நிப்பிள், அலர்ஜியையும் ஏற்படுத்தும். ரப்பர் நிப்பிள் அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. மூக்கு, கண், வாய் போன்ற இடங்களில் எரிச்சல்தன்மையும் அதிகமாக இருக்கும். தொண்டை வீக்கமடையும். மூச்சு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.