மட்டக்களப்பில் அதிகரித்துச் செல்லும் கொரோனா!

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மட்டக்களப்பிலும் அதிக தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 35% பரிசோதனைகள் சாதாகமாக காணப்படுகின்றது. இதன் காரணமாக அதிகமான தொற்றாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர் அவர்களுக்குரிய முறையான சிகிச்சை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

ஏற்கனவே 6 வைத்திய விடுதிகள் கொரோனா நோயளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நாவற்க்காடு வைத்தியசாலையையும் எமது வைத்தியசாலையுடன் இணைத்து நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கவுள்ளோம்.

மேலதிக கட்டில்களை மட்டக்களப்பு வைத்தியசாலையில் அதிகரிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை, பொறுத்தவரையில் ஒட்சிசன் தட்டுப்பாடு இன்னும் ஏற்படவில்லை.16ஆம் திகதியில் இருந்து. அத்தியாவசியமான நோயாளிகளை அனுமதிக்க தீர்மானித்துள்ளோம்.

வைத்தியசாலையில் பாஸ் நடைமுறையிருக்கும் ஒவருவருக்கு மாத்திரமே நோயாளியுடன் இருப்பதற்க்கு அனுமதி வழங்கப்படும்.கிளினிக் நோயாளர்கள் தொலைபேசி மற்றும் தபால்மூலம் தங்களது மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும். தயவுசெய்து பொதுமக்கள் இந்த நடைமுறையை பேணுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.