10 நிமிடத்தில் செய்யலாம் தக்காளி குழம்பு

தோசை, இட்லி, சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த தக்காளி குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி – தலா 2,
கீறிய பச்சை மிளகாய் – 1,
பூண்டு – 2 பல்,
பொடியாக நறுக்கிய தேங்காய் – சிறிதளவு,
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1 ,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

நாட்டு தக்காளி, பெங்களூரு தக்காளியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும்.

வெங்காயம், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தேங்காயைப் போட்டு… பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

தீயைக் குறைத்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு பச்சை வாசனை போனதும், சீரகத்தூள், அரைத்த தக்காளி விழுது (அ) பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சூப்பரான தக்காளி குழம்பு ரெடி.