மாணவனின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பம்…. வெளியான காரணம்!

இணைய வழி கல்விக்கு தேவையான ஸ்மார்ட் போன் தனக்கு வாங்கித் தரவில்லையென்பதால் மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் வாரியபொல பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தில், தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த 16 வயதான மாணவன் வீட்டில் தனது அறைக்குள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.