பிரபல பாடகியின் மகளுக்கு பாலியல் தொல்லை.. சொந்த தங்கை வீட்டில் 4 பேரால் நேர்ந்த கொடூரம்..

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரை சார்ந்த பிரபல திரைப்பட பாடகி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உள்ள பாடலை பாடியுள்ளார். தற்போது, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாடல் நிகழ்ச்சியில் பணியாற்றி வருகிறார். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் திரைப்பட பாடகிக்கு, 15 வயதுடைய மகள் இருக்கிறார்.

இந்நிலையில், பணியின் காரணமாக பெண்மணி தனது மகளை சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள தனது தங்கையின் வீட்டில் தங்கவைத்த நிலையில், கடந்த 6 வருடமாக சித்தியின் இல்லத்திலேயே 15 வயது சிறுமி வளர்ந்து வந்துள்ளார். சமீபத்தில், சிறுமியின் தாய் தனது மகளை ஹைதராபாத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

ஹைதராபாத்தில் தாயுடன் தங்கியிருந்த சிறுமிக்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் செல்லுதல், திடீரென மனக்கவலை மற்றும் தனிமையில் இருப்பது, இரவுகளில் அலறி எழுந்திருப்பது என இருந்துள்ளார். இதனால் பதறிப்போன தாய் சிறுமியிடம் விசாரிக்கையில், சிறுமி தனது சித்தியின் வீட்டில் இருக்கையில் சித்தியின் கணவர், சித்தியின் உறவினர் பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமானது.

மேலும், சித்தி கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் தேவாலயத்திற்கு சென்று மதபோதகருடன் பாடல் பாடி வந்த நிலையில், தேவாலயத்தில் மதபோதகராக பணியாற்றி வந்த காமுகனும் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து, சிறுமியின் தாயார் கடந்த ஏப்ரல் மாதத்தில் கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகளை சிறுமியிடம் நடத்திய ரகசிய விசாரணையில் சிறுமியின் சித்தி, சித்தப்பா, உறவினர் மகன் மற்றும் கிருத்துவ பாதிரியார் ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து, பாதிரியார் ஹென்றி பால் (வயது 38), சிறுமியின் சித்தி ஷகீனா கான் (வயது 38), ஜான் ஜெஸில் (வயது 47), கிளாரா (வயது 23) ஆகிய நான்கு பேரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இவர்களை தேடி வந்தனர்.

காவல்துறையினர் தங்களை தேடுவதை அறிந்த சிறுமியின் சித்தி, சித்தப்பா, உறவினர் மகன் மற்றும் கிருத்துவ பாதிரியார் அனைவரும் தலைமறைவான நிலையில், இவர்களை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியாகவே, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், சிறுமியின் சித்தி இந்த விஷயத்தில் முக்கிய குற்றவாளியாக இருந்த அதிர்ச்சி தகவலும் உறுதியானது.