சிகரெட் கொடுக்கமையினால் கடைக்கார் அடித்துக்கொலை !

மதுரை அருகே சிகிரெட்டை கடனுக்கு கொடுக்க மறுத்த கடைக்காரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள சமத்துவபுரத்தில் பெட்டிக்கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தவர் வினோத்.

அவரது கடைக்கு வந்த அருண்பாண்டி, கார்த்திக், ஜோதிமணி ஆகிய மூன்று இளைஞர்கள் சிகரெட்டை கடனுக்கு தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு வினோத் ஏற்கனவே இருக்கும் கடனை கொடுத்துவிட்டு சிகரெட் வாங்கிச் செல்லுமாறு கூறியுள்ளார்.

சிகிரெட் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்திய இளைஞர்களிடமிருந்து அவரை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், பலத்த காயமடைந்திருந்த வினோத் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வினோத்தை தாக்கிய 3 இளைஞர்களை மீது வழக்கு தொடர்ந்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.