மட்டக்களப்பு அநாதை இல்லத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா… வெளியான தகவல்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் உள்ள களுதாவளை பகுதியில் அமைந்துள்ள அனாதை இல்லத்தில் 23 சிறுவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனாதை இல்லத்தில் 33 குழந்தைகள் மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனைகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று மட்டக்களப்பு சுகாதார சேவைகளின் பிராந்திய பணிபபாளர் டொக்டர் என்.எஸ். மயூரன் கூறினார்.

இதனையடுத்து அனாதை இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டு, அங்கிருப்போரை தனிமைப்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது.