நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்!

தற்போது நாட்டில் கையிருப்பில் உள்ள 4 பில்லியனை முகாமைத்துவம் செய்வதன் மூலம், பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியும் என நிதி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

யுத்தம் நிலவிய காலப்பகுதியில் நாட்டில் 1.2 பில்லியன் டொலர் கையிருப்பு காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாடு சில தடவைகள் முடக்கப்பட்டமையால், அரசாங்கத்திற்கு நிதி கிடைக்கும் வழிகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் பணம் கிடைக்கும் முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு கூடிய விரைவில் நாடு முழுமையாக திறக்கப்பட வேண்டும் எனவும் நிதி அமைச்சர் இதன் போது கூறினார். டொலரின் பெறுமதி அதிகரிப்பது தொடர்பில் பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.