லண்டனில் இந்திய மாணவருக்கு ஏற்ப்பட்ட்ட நிலை புறாவுக்கு இரை வைத்தது குற்றமா?

லண்டன் மான்செஸ்டரில் புறாவுக்கு இரை வைத்த மாணவருக்கு 150 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சால்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் கேரளாவை சேர்ந்த மாணவர் ரிஷி பிரேம். இவர் Piccadilly பூங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது இவரின் அருகில் புறாக்கள் வந்து அமர்ந்த நிலையில் தான் வைத்திருந்த உணவில் பாதியை புறாக்களுக்கு அவர் இரையாக போட்டுள்ளார். அதில் சில நடைபாதையில் விழுந்திருக்கிறது.

இதைப்பார்த்த அமலாக்க அதிகாரி, குப்பைகளை நடைபாதையில் கொட்டியதாக மாணவர் ரிஷிக்கு 150 பவுண்டுகள் அபராதம் விதித்துவிட்டார். எனினும் ரிஷி, இந்திய நாட்டில், புறாக்களுக்கு இரை வைப்பது வழக்கமானது தான் என்று கூறியபோது அதனை ஏற்க மான்செஸ்டர் நகர சபை மறுத்துவிட்டது.

புறாக்களுக்கு மக்கள் இரை வைப்பது, இங்கு தடை செய்யப்பட்ட ஒன்று. குப்பைகளை வீசுவதற்கு சமம் என்று தெரிவித்துவிட்டனர். ரிஷியிடம் அபராதம் செலுத்த அவ்வளவு தொகை இருக்கவில்லை என்பதுடன் கொரோனா காரணமாக கேரளாவில் அவரது குடும்பத்தினரிடமும் பண்ம் கேட்கமுடியாத நிலையில் அவர் கற்கும் பல்கலைக்கழகம், அவருக்கு உதவுவதாக தெரிவித்திருக்கிறது.

இதனையடுத்து அவர் அபராதத்தை செலுத்தி விடலாம் என்று தாம் நம்புவதாக கூறியிருக்கிறார்.